நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிரான போராட்டம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக கம்யூனிஸ்ட்களின் பாலன் இல்லத்தில் நடந்த போராட்டத்தில் சனம் ஷெட்டியை முன்வைத்து வெடித்த சர்ச்சை பேசுபொருளாக மாறியது. இதுபற்றி சமயம் தமிழுக்கு தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனர் உமர் முக்தர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
நீட் தேர்வு விவகாரம் என்றதும் தமிழர்கள் மனதில் நினைவிற்கு வரக்கூடிய முதல் விஷயம் மாணவி அனிதா. இந்த தேர்வு வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியவர். இவரது இழப்பு மிகப்பெரிய வலியாக மாறியது. இந்த விஷயம் தொப்பி வாப்பா பிரியாணியின் நிறுவனர் உமர் முக்தர் அவர்களையும் பாதித்தது. இதற்காக போராட்டங்களை, தொடர்ச்சியான அரசியல் முன்னெடுப்புகளை கையில் எடுத்தவர். நீண்ட இடைவெளிக்கு பின்னர், சென்னையில் உள்ள சிபிஐ கட்சி தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாணவர்கள் போராட்டத்தில் பார்க்க முடிந்தது.
பாலன் இல்லத்தின் நீட் மாணவர்கள் போராட்டம்
நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்களின் எழுச்சி தேசிய அளவில் தீப்பொறி போல பற்றிக் கொண்டது. அந்த பொறியை பாலன் இல்லம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் உமர் முக்தர் கலந்து கொண்ட போராட்டத்தில் சில சர்ச்சைகளும் வெடித்தன. இதுபற்றி சமயம் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், நான் நடுநிலையாக தான் நடந்து கொண்டேன். ஆனால் தவெக தரப்பில் இருந்தும், திமுக தரப்பில் இருந்தும் என்னை விமர்சிக்கவும் செய்தனர். பாராட்டவும் செய்தனர்.
டெல்லி GENZ போராட்டம் !பரபரப்பு பேட்டி குடுத்த அன்புமணி! PMK நிலைப்பாடு இதுதான்!
சனம் ஷெட்டி பேச எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள்
சனம் ஷெட்டி வருகை புரிவதற்கு முன்னதாக அந்த மேடையில் 6 நாட்களில் நூற்றுக்கணக்கானோர் பேசியிருப்பர். திரைக் கலைஞர்கள், அரசியல் ஆளுமைகள் எனப் பலர் வந்தனர். இவர்கள் அனைவருமே பேசினர். ஆனால் இவர்களில் யார் பேசும் போதும், இதற்கு மேல் பேச வேண்டாம். வெளியே செல்லுங்கள் என்று மாணவர்கள் சொல்லவில்லை. சனம் ஷெட்டியை பொறுத்தவரை தவெக ஆதரவாளர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் பேசக்கூடாது என்று முடிவெடுத்திருந்தால் வரும் போதே, எதிர்வினைகளை காண்பித்து தடுத்து நிறுத்தியிருப்பர். ஆனால் மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
சனம் ஷெட்டி எழுப்பிய கேள்விகள்
நான் வரும் போது இப்படி கைதட்டுகிறீர்கள். முடிக்கும் போது இதேபோல் கைதட்டுவீர்களா? எனப் பார்க்கலாம். இங்கு யாரெல்லாம் மாணவர்கள்? யாரெல்லாம் CJP பார்ட்டி? யார் யாரெல்லாம் Organic Public? இந்த கேள்விகள் அனைத்தும் மாணவர்கள் மத்தியில் ஒருவித முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.
நீட் போராட்டத்தில் ஜனநாயகன் சர்ச்சை
இதையடுத்து பேசுகையில், நான் ஜனநாயகன் திரைப்படத்தை FDFS பார்த்து விட்டு வந்திருக்கிறேன் என்றதும் மாணவர்கள் கோபமடைந்தனர். சனம் ஷெட்டியை நோக்கி Down, Down என்று கூச்சலிட்டனர். இவரை பேச வேண்டாம் என்று மாணவர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கிடையில் கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலர் அவர் பேசட்டும். முழுமையாக கேட்டு அதன்பிறகு வேண்டியதை ஏற்றுக் கொள்வோம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, சனம் ஷெட்டி வேறு சிலரிடம் கோபித்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.
அப்போது நான் மைக்கை வாங்கிக் கொண்டு, மாணவர்களை சமாதானம் செய்துவிட்டு பேச வைக்கிறோம் என்று கூறினேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார். எனவே சனம் ஷெட்டியை பேச விடாமல் தடுத்தது நான் அல்ல என்று உமர் முக்தர் தெளிவுபடுத்தினார்.
GenZ DMK வைத்த பதாகைகளால் சிக்கல்
அதன்பிறகு ஜூலி உள்ளிட்டோர் GenZ DMK என எழுதப்பட்டிருந்த டீ-ஷர்ட் உடன் வந்திருந்தனர். இவர்கள் செய்த விஷயங்கள் தவெக vs திமுக என மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் கொண்டு சென்றனர். முதலமைச்சர் விஜய்யை செய்யும் வகையிலான பதாகைகளை கொண்டு வந்து வைத்ததும் GenZ DMK-வினர் தான் என்று உமர் முக்தர் தெரிவித்தார்.
Source link
