சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: சி.பி.ஐ.,க்கு மாற்ற தேவையில்லை: கேரள ஐகோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: ‘சபரிமலை தங்கம் மாய மான வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திருப்தியாக இருப்பதால், சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’ என, கேரள உயர் நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தி னம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் மேற்கூரை, கருவறை கதவு மற்றும் இரு துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

பராமரிப்புக்காக இதை கழற்றி எடுத்துச் சென்றபோது பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் கவசங்களில் இருந்த தங்கங்களை உருக்கி திருடியதாக குற்றஞ் சாட்டப்பட்டது.

உண்மையை கண்டறியும் நோக்கில், கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.

அதன் அடிப்படை யில் மேற்கொள்ளப்பட்ட விசா ர ணையில், உன்னிகிருஷ் ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள், கோவில் தந்திரி கண்டரரூ ராஜீவரரு உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சூழலில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கக் கோரி கேரள மாநில பா.ஜ., தலைவர் ராஜீவ் சந்திர சேகர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயகுமார் அடங் கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சபரிமலை தங்கம் மாயமான விவகாரம் தொடர்பான விசாரணை சீராக சென்றுக் கொண்டிருக்கிறது. சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் திறம்பட பணியாற்றி வருகின்றனர்.

நீதிமன்றமும் இந்த விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. விசாரணை மூலம் வெளி கொண்டு வரப்பட்ட விபரங்களை அறிவோம்.

எனவே, வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிர்க்கட்சியை சேர்ந்த காங்கிரஸ் தலைமையிலா ன ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு பின்ன டைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், முதல்வர் அலுவலகம் தலையிட்டு வருவதாகவும், எனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் விமர்சித்திருந்தது.

தவிர, கேரள சட்டசபையிலும் கடந்த இரு நாட்களாக இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி இருந்தன.

Source link