புவனேஸ்வர்: அன்றாட வாழ்விலும், சமூக ஊடகங்களிலும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் ஒடிஷாவில் ஆளும் பா.ஜ., அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக சட்டம் இயற்றப்படும் என்று மாநில சட்டத்துறை அமைச்சர் பிரித்விராஜ் ஹர்சந்த் நேற்று அளித்த பேட்டி:
இணையதளங்களில் ஆபாசமான மற்றும் அவதுாறான வார்த்தைகளை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் புதிய மசோதா பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் இது போன்ற மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மசோதா, பொறுப்பான தகவலை பகிர்வதை ஊக்குவிக்கும். எனவே, சமூக ஊடகங்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தும் நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்க இந்த மசோதா வகை செய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
