சென்னை: சமூக நீதி விடுதியில் மாணவிகளுக்கு கெட்டுப்போன உணவு வழங்கப்பட்டதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சமூக நீதிக் கல்லூரி மாணவியர் விடுதியில் தரமற்ற, புழுக்கள் நிறைந்த உணவு வழங்கப்பட்டதாக அவ்விடுதி மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது, பெண்கள் மற்றும் மாணவிகளின் நலனை அரசு எவ்வாறெல்லாம் புறக்கணித்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.
