சமூக வலைதளங்களுக்கு பிரேக் விட்ட பிரபல நடிகர்!

நடிகர் விஷ்ணு விஷால், கடைசியாக ஆர்யன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தை வழங்கியிருந்தார். இதனிடையே ராம்குமார் இயக்கத்தில் ‘இரண்டு வானம்’, செல்லா அய்யாவு இயக்கத்தில் ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் சினிமாவில் தனது 17வது ஆண்டு பயணத்தை நிறைவு செய்திருந்தார். மேலும் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான திரைப்பட விருதையும் ராட்சசன் படத்திற்காக வென்றிருந்தார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளங்களி இருந்து சிறிது இடைவெளி எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் பட அப்டேட்டுடன் திருப்பி வருவதாக குறிப்பிட்டு இரண்டு வானம் மற்றும் கட்டா குஸ்தி 2 ஆகிய படங்களின் ஹேஷ் டேக்குகளை இணைத்துள்ளார். 

ஏற்கனவே இவரது நடிப்பில் மோகன்தாஸ் என்ற படம் உருவாகி ரிலீஸாகாமல் தாமதமாகி வருகிறது. இரண்டு வானம் படமும் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு பின்பு கடந்த ஆண்டு தான் ஃபர்ஸ்ட் லுக்கே வெளியானது. கட்டா குஸ்தி படம் மட்டும் தான் கடந்த ஆண்டு ஆரம்பித்து முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த சூழலில் இவர் பிரேக் எடுத்திருப்பது இந்த படங்களின் தயாரிப்பு மீண்டும் தள்ளி போகவுள்ளதா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. ஏற்கனவே வெற்றி கூட்டணி என்பதால் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.  



Source link