புதுடில்லி:கச்சா சமையல் எண்ணெய் விலை உயர்வையொட்டி சமையல் எண்ணெய் விலை, மொத்த விற்பனை சந்தை,யில் 5 சதவீதம் வரையும் உலர் பழங்களின் விலை 8 சதவீதம் வரையும் உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால், சமையலுக்கு பயன்படுத்தப்படும் சோயா எண்ணெய், பாமாயில் ஆகியவை பயோ டீசல் தயாரிப்புக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
சோயா எண்ணெய் மற்றும் பாமாயில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரவில்லை என்றாலும், சமையல் எண்ணெய் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விநியோக தடை, சில காலம் தான் நீடிக்க வாய்ப்பு இருக்கும் என்றாலும், சமையல் எண்ணெய் விலை மொத்த விற்பனை சந்தையில் தேவையின் அடிப்படையில் 3- – 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
போர் தொடர்வதால், ஈரான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சில் உலர் பழங்களின் விலை 10–20 சதவீதம் உயர்ந்துள்ளது. பேரீச்சை, பிஸ்தா, பாதாம், உலர் அத்தி பழங்களின் விலை உள்ளூர் சந்தையில் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
விலை உயர்வு
சமையல் எண்ணெய்
3 முதல் 5 சதவீதம்
உலர் பழங்கள் 5 முதல் 8 சதவீதம்
