சமையல் எரிவாயு சிலிண்டரின் எடை 14.2-லில் இருந்து 10 கிலோவாக குறைகிறதா?.. மத்திய அரசு விளக்கம்

சிலிண்டர் எடையைக் குறைக்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்றும், பரப்பப்படும் செய்திகள் அனைத்தும் வெறும் ஊகங்களே என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் போதிய இருப்பு உள்ளதாகவும், 14.2 கிலோ சிலிண்டர் விநியோகம் வழக்கம் போலவே தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அண்மையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது குறிப்பிடதக்கது.

Source link