மும்பை: ‘இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்’ ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ‘ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா’ நிறுவனத்துடன் இணைந்து, சரக்கு போக்குவரத்துக்கான புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளன.
வெளிநாட்டு கப்பல்களை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்களை கொண்டு வருவது மற்றும் கொண்டு செல்வதற்கு, சொந்தமாக கப்பல்களை வாங்குவதே இந்த புதிய நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதனால், வெளிநாட்டு கப்பல்களை வாடகைக்கு எடுப்பதற்காக இந்தியா ஆண்டுதோறும் செலவிடும் பல லட்சம் கோடி ரூபாயை சேமிக்க முடியும்.
இந்த கூட்டு நிறுவனத்தின் வாயிலாக பழைய மற்றும் புதிதாக கட்டப்பட்ட கப்பல்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, இதற்கான தொழில்நுட்ப, செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை உதவிகளை வழங்கும் எனவும்; எண்ணெய் நிறுவனங்கள் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொண்டு, சரக்கு போக்குவரத்தை உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது.
59
கப்பல்கள் வாங்க திட்டம்
ரூ.15,000 – 17,000 கோடி
முதலீட்டு தொகை
ரூ.25,000 கோடி
கடல்சார் மேம்பாட்டு நிதி
ரூ. 6 லட்சம் கோடி
வெளிநாட்டு கப்பல் வாடகைக்கான ஆண்டு செலவு
