சரத் பவார் 'டிஸ்சார்ஜ்'

புனே: மஹாராஷ்டிராவில், மார்பு தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேசியவாத காங்., சரத் சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவார், 85, நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிராவில் புனே மாவட்டத்தின் பாராமதியில் உள்ள வீட்டில் வசித்து வரும் சரத் பவாருக்கு, சமீபத்தில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதுடன் தொடர்ச்சியான இருமலால் அவதியுற்றார்.

இதையடுத்து புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்ததில் அவருக்கு மார்பில் தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, சரத் பவார் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 34 நாட்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அவருக்கு அறிவுரை வழங்கினர்.

Source link