சரிந்த பெஞ்சமின் நெதன்யாகு செல்வாக்கு: இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி – impact of benjamin netanyahu coalition victory in israel election results 2026

இஸ்ரேல் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. இதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் நெதன்யாகு கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.

உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காணச் செய்ததில் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு முக்கிய பங்குண்டு. ஏனெனில் இவர் தொடங்கி வைத்த இஸ்ரேல் – ஹமாஸ் போர், இஸ்ரேன் – ஈரான் போர் இரண்டும் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஹமாஸ் மீதான போரில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஈரான் மீதான போரில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து எரிபொருள் தட்டுப்பாட்டை நோக்கி நகர வைத்தது. இதன் பாதிப்புகள் தற்போது வரை சீரடையவில்லை.

இஸ்ரேல் தேர்தல் – வாக்கு எண்ணிக்கை மும்முரம்

தனது செல்வாக்கை உள்நாட்டில் நிலைநிறுத்தி கொள்ள பெஞ்சமின் நெதன்யாகு இப்படி செய்கிறார். அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கணக்கில் காய் நகர்த்துகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறான செய்தியை அளித்து வருகிறது. மொத்தமுள்ள 120 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க 61 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 2026 இஸ்ரேல் பொதுத்தேர்தலில் 77.7 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளை எண்ணும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.

Social media politics உண்மையிலேயே election result-ஐ பாதிக்குமா_ voters-ஐ influence பண்ணுகிறதா_

தேர்தல் முடிவுகள் – யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை

இன்று நண்பகல் நிலவரப்படி 91.1 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு 26 இடங்களும், எதிர்க்கட்சி தலைவர் காடி எய்சென்கோட்டின் யாஷர் கட்சிக்கு 21 இடங்களும் கிடைத்துள்ளன. இதையடுத்து ஜாயிண்ட் லிஸ்ட் 12, டுகெதர் 12, டெமாகிராட்ஸ் 8, ரா’அம் 7, ஒய் இஸ்ரேல் பெஇடெய்னு 7, யுடிஜே 7, ஓட்ஸ்மா யெஹுடிட் 7, ஷாஸ் 7, ஆர் இசட் பி –ஸெஹுத் 6 என முன்னிலை வகிக்கின்றனர்.

இஸ்ரேல் பாதுகாப்பில் உறுதி

தேர்தலுக்கு முன்பாக பெஞ்சமின் நெதன்யாகு மக்களுக்கு அளித்த கோரிக்கை என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு. எந்த ஒரு நிலையிலும் அதை விட்டு கொடுக்க மாட்டேன் என்று உறுதி அளித்திருந்தார். எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை போர்கள் இல்லாத சூழல். இதுவரை நடைபெற்ற போர்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று தெரிவித்திருந்தனர்.

எழுச்சி பெறும் அரபுக் கட்சிகள்

இந்நிலையில் தான் நெதன்யாகு எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம் என்பது அரபு கட்சிகளின் எழுச்சி. ஜாயிண்ட் லிஸ்ட் 12, ரா’அம் 7 என வெற்றி பெறும் நிலையில் இருக்கின்றன. இவர்கள் யாஷர் கட்சி உடன் இணைந்தால் பலம் வாய்ந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக மாறுவர். நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை பிடிக்க காய் நகர்த்துவார்களா? வெற்றி வாய்ப்பு அதற்கு கைகொடுக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.

பெஞ்சமின் நெதன்யாகு கறார் நடவடிக்கை

இஸ்ரேல் என்றாலே பதற்றமடையும் அளவிற்கு சர்வதேச அளவில் பார்வை உண்டாகியிருக்கிறது. தனது நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டவர்களை விரட்டி அடிப்பது என நெதன்யாகு கறாராக செயல்பட்டு வருகிறார். இஸ்ரேலை சீண்டும் வகையில் ஏதாவது நடந்து விட்டால் உடனே அதிரடியான பதிலடிக்கு தயாராகி விடுகிறார். இதற்காக அமெரிக்காவையும் தன்னுடன் அழைத்து கொள்கிறார்.

இஸ்ரேல் தொடுத்த போர் முடிவுக்கு வருமா?

2026 இஸ்ரேல் தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை நெதன்யாகுவின் வீழ்ச்சி தொடங்கியிருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இருப்பினும் உடனடியாக தோல்வியடைந்து ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு விடுவார் என சொல்லிவிட முடியாது. இந்த தேர்தல் முடிவுகள் அளிக்கும் அழுத்தத்தின் மூலம் தற்போதைய போர்களை முடிவுக்கு கொண்டு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் எழுந்திருக்கிறது.

Source link