சரியாக வழிநடத்தினால் கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான்..ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா

அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களை இழந்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு சென்றுள்ளது. இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் ஹராரேயில் நாளை (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்கிடையில் ஜிம்பாப்வே கேப்டன் சிகந்தர் ராசா நேற்று அளித்த ஒரு பேட்டியில் இளம்வீரர் சூர்யவன்ஷி குறித்து கூறியதாவது,

“வைபவ் சூர்யவன்ஷி அசாத்தியமான திறமை கொண்ட கிரிக்கெட் வீரர். 15 வயது சிறுவன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் போது, வெறும் 2,3 ஆட்டங்களை வைத்து அவரை விமர்சிப்பது நியாயமற்றது. சூர்யவன்ஷியை சுற்றி பல மூத்த கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். அவரை சரியாக கையாண்டால், தலைமுறைக்கு ஒரு முறை கிடைக்கும் ஆகச்சிறந்த திறமையானவராக திகழ்வார். கடந்த ஓராண்டில் அவர் செய்த சாதனைகள், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு அவர் அளித்த பங்களிப்பு (ஜூனியர் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 80 பந்தில் 175 ரன் குவித்தார்) மற்றும் அதே வயதில் அவர் சர்வதேச போட்டியில் அறிமுகமானது சாதாரண விஷயமல்ல. இந்த காலத்தில் இது போன்ற கதைகளை கேட்பது அரிது. சூர்யவன்ஷி ஒரு தனித்துவமான வீரர். அவரை எவ்வாறு வழிநடத்துகிறார்கள் மற்றும் கையாளுகிறார்கள் என்பது மிகவும் முக்கியம். “

இவ்வாறு சிகந்தர் ராசா கூறினார்.

Source link