சரிவிலும் பங்குகள் உயர்வு

சர்க்கரை பங்குகள் 15% வரை உயர்வு

கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், எத்தனால் உற்பத்தி லாபகரமாக மாறியுள்ளது. இதுதவிர, உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான பிரேசிலில் சர்க்கரை உற்பத்தி குறையும் என்ற கணிப்பும் நேற்று சர்க்கரை உற்பத்தி நிறுவன பங்குகள் விலை உயர காரணமாக கூறப்படுகிறது.


எண்ணெய் நிறுவன பங்குகள் ஏற்றம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் நேற்று 2 சதவீதம் வரை உயர்ந்தன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்மீது அரசு விண்டுபால் டேக்ஸ் எனப்படும் எதிர்பாராத லாபத்தின் மீதான வரி விதிக்காதது இத்துறைக்கு பெரும் பலத்தை கொடுக்கும் என்பதும் ஏற்றத்துக்கு காரணம்.

கடந்த இரண்டு வாரங்களில் ஓ.என்.ஜி.சி., பங்குகள் 11 சதவீதமும், ஆயில் இந்தியா பங்குகள் 7 சதவீதமும் உயர்ந்திருந்தன.

Source link