சர்ப்ரைஸ் கொண்டாட்டம்; நயன்தாரா செயலால் நெகிழ்ந்த ராதிகா

தமிழில் மூத்த நடிகையான சமீபத்தில் தாய் கிழவி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் இவரது நடிப்பை பாராட்டி கமல், சிவகுமார் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இப்படம் இல்லாதும் ஆரம்பகாலத்தில் நாயகியாக இன்று போய் நாளை வா, போக்கிரி ராஜா, ரங்கா, மூன்று முகம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு தேசிய விருதையும் வென்றுள்ளார். 1985ஆம் ஆண்டு அவர் தயாரித்து நடித்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்திற்காக வாங்கியுள்ளார். தயாரிப்பாளராக இவ்விருதினை வாங்கியுள்ள அவர் இன்னும் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

இப்போது சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்’ உள்ளிட்ட இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சினிமாவில் 49 ஆண்டுகளை ராதிகா கடந்துள்ளார். இதனையொட்டி ஹாய் படக்குழுவினர் அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் மாலை அணிவித்து மரியாதையும் செய்துள்ளனர். அப்போது நயன்தாரா ராதிகாவுக்கு கண்ணத்தில் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தினார். பட நாயகன் கவின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். 

இந்த நிகழ்வு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ராதிகா, “ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், ஹாய் படப்பிடிப்புத் தளத்தில் இந்த சர்ப்ரைஸான கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த அன்பான நயன்தாராவுக்கும் நன்றி . இந்த அன்பையும் பாசத்தையும் கண்டு நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். எனது சக கலைஞர்களிடமிருந்து நான் பெறும் அன்பில்தான் எனது உண்மையான வெற்றி அளவிடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். 

Source link