சென்னை:’மெட்ராஸ் மெஷின் டூல்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம்’ சார்பில், தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் ஐந்து நாள் சர்வதேச கண்காட்சி, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
மத்திய வர்த்தக அமைச்சகத்தின், மண்டல கூடுதல் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், கண்காட்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ‘இம்டாப் அண்டு இப்பெக்ஸ் – 2026’ எனும் தலைப்பில், உலோக இயந்திரங்கள் மற்றும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ‘பிளென்ட்ரிக்ஸ்’ எனும் சர்வதேச மாநாடு மற்றும் ‘ஸ்கில் கனெக்ட்’ என்கிற வேலைவாய்ப்பு பயிற்சி குறித்த சேவையும் வழங்கப்படுகிறது.
சூப்பர் ஆட்டோ போர்ஜ் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் முரளி சங்கர், இந்தியன் பாலிமர் காம்பவுன்டர்ஸ் கொலாபரேடிவ் நிறுவன தலைவர் ஸ்ரீனிவாசன், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை தலைமை இயக்குநர் ஷிஷிர் சின்ஹா, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன இயக்குநர் சுரேஷ் பாபுஜி, ஒடிஷா மாநில ராவன்ஷா பல்கலையின் துணைவேந்தர் சஞ்சய் கே.நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
