சல்மான்கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி என மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன் அப் – nayanthara’s line up and her movie shoot updates exclusively

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் “மனசினக்கரே’ மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிறார்.

சல்மான் கான், பாலகிருஷ்ணா, மம்மூட்டி, மோகன்லால், யாஷ், நிவின்பாலி என பலரின் படங்களில் பிசியாக இருக்கிறார். ”சினிமாதான் என்னுடைய வாழ்க்கையாக மாறிவிடும் என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும் இன்று என்னை செதுக்கி இருக்கிறது. சினிமாவுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று நெகிழ்ச்சியாக சொல்லும் நயன்தாராவின் லைன் அப் குறித்த அப்டேட் இது.

தமிழை தவிர இதர மொழிகளில் ஹீரோக்களுடன் நடித்து வரும் நயன்தாரா, தமிழில் ஹீரோயின் சென்ட் ரிக்கில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ‘மூக்குத்தி அம்மன்2’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, ‘ராக்காயி’ ‘ஹாய்’ இவை எல்லாமே ஹீரோயின் சென்ட்ரிக் தான்.

‘மூக்கத்தி அம்மன் 2’வை சுந்தர்.சி இயக்கி முடித்துவிட்டார். ஃபேன்டஸி படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. ‘ஹாய்’ படத்தில் நயன்தாராவுடன் கவின், பாக்யராஜ், பிரபு, ராதிகா என சீனியர்கள் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. முதல் சிங்கிள் மே முதல் வாரத்தில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. ‘யாரடி நீ மோகினி’ போல இது ஒரு காதல் கதை என்கிறார்கள்.

கார்த்தியின் ‘சர்தார் 2’வை தயாரித்திருக்கும் நிறுவனம் தான் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தையும் தயாரித்துள்ளது. யூடியூப்பர் டியூட் விக்கி இயக்கியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்திருக்கிறது. யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன் என பலரும் நடித்துள்ளனர். விரைவில் இதன் அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

ஹீரோயின் சென்ட் ரிக்கான ‘ராக்காயி’யை செந்தில் நல்லசாமி இயக்கி வருகிறார். பீரியட் படமான இப்படமும் நயனின் லைனப்பில் உள்ளது.

Source link