புதுடில்லி: அர்ஜென்டினாவுக்கு எதிரான ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய பெண்கள் அணிக்கு கோல்கீப்பர் சவிதா, தீபிகா தேர்வாகினர்.
அர்ஜென்டினா செல்லவுள்ள இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நான்கு போட்டிகள் (ஏப். 13, 14, 16, 17) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கோல்கீப்பர் சவிதா, தீபிகா, ஜோதி, மும்தாஜ் கான் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பினர். மற்றொரு கோல்கீப்பர் பிச்சு தேவி, தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். கேப்டனாக சலிமா நீடிக்கிறார்.
இந்திய அணி: சவிதா, பிச்சு தேவி (கோல்கீப்பர்), சலிமா (கேப்டன்), நிக்கி பிரதான், இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு, மணிஷா சவுகான், ஜோதி, உதிதா, லால்தந்த்லுவாங்கி, வைஷ்ணவி, சாக் ஷி, சுனேலிதா, நேஹா, தீபிகா சோரெங், ருதுஜா, இஷிகா, பல்ஜீத் கவுர், நவ்னீத் கவுர், தீபிகா, அன்னு, பியூட்டி டங்டங், லால்ரெம்சியாமி, மும்தாஜ் கான்.
