திருப்பூர்: இந்திய ஆயத்த ஆடை வர்த்தகத்தில், அரபு நாடுக ளுக்கான ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் எதிர்பாராத வகையில் அதிகரித்து உள்ளது.
அமெரிக்க சந்தையில் திடீர் சவால்கள் ஏற்பட்ட நிலையிலும், மற்ற நாடுகளுடனான வர்த்தகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து அதிக அளவு ஆடை ஏற்று மதி நடக்கும், ‘டாப் 10’ நாடுகள் பட்டியலில், அரபு நாடுகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி அமெரிக்காவுக்கு, 13 சதவீதமும், நெதர்லாந்துக்கு 27 சதவீதமும், ஸ்பெயினுக்கு 14 சதவீதமும், ஐக்கிய அரபு எமி ரேட்ஸுக்கு 6.20 சதவீதமும் அதிகரித்திருந்தது.
நடப்பு நிதியாண்டில், துவக்கத்தில் இருந்தே, அரபு நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. ‘டாப் 10’ நாடுகளுக்கான, ஒன்பது மாத ஆடை ஏற்றுமதி, 76,324 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது; இது, முந்தைய ஆண்டில், 71,641 கோடி ரூபாயாக இருந்தது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், ‘வழக்கத்தைவிட, அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
![]() |
கடந்த ஏப்., முதல் டிச., வரை, சவுதி அரேபியாவுக்கான ஆடை ஏற்றுமதி, 18.50 சதவீதம் அதிகரித்துள்ளது; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்துள்ளது; ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியும், 8 முதல், 15 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது’ என்றனர்.

