சாத்துார்: ''ஊழலுக்கும், நல்லாட்சிக்கும் இடையே நடக்கும் போட்டியே இந்த தேர்தல். நாட்டிலேயே ஊழல் நிறைந்த

சாத்துார்: ”ஊழலுக்கும், நல்லாட்சிக்கும் இடையே நடக்கும் போட்டியே இந்த தேர்தல். நாட்டிலேயே ஊழல் நிறைந்த தி.மு.க., அரசை அ.தி.மு.க., கூட்டணி நிச்சயமாக வெல்லும்,” என பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்துார் தொகுதியின் பா.ஜ., வேட்பாளரான அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, சாத்துாரில் பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், ‘ரோடு ஷோ’ நடத்தி நேற்று ஓட்டு சேகரித்தார். அவருடன், நடிகர் சரத்குமார் பிரசாரம் செய்தார்.

முக்குராந்தல் பகுதி வரை ‘ரோடு ஷோ’ நடந்தது. சாத்துார் மெயின் ரோட்டில் உள்ள சர்ச்சில் இருந்து ஜெபக்கூட்டத்தை முடித்து வந்த கிறிஸ்தவர்களை நிதின் நபின் பார்த்து, கையசைத்து ஓட்டு கேட்டார்.

சிலர், குழந்தைகளை கொடுத்து ஆசி பெற்றனர். வாகனத்தில் இருந்த சரத்குமாருக்கு சிலர் கைகொடுத்தனர்.

நிதின் நபின் அளித்த பேட்டி:

நாட்டிலேயே ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் தி.மு.க.,வை, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி நிச்சயம் வீழ்த்தும்.

எங்கள் கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெறும். இந்த தேர்தல், தமிழகம் – டில்லி இடையேயான தேர்தல் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார்.

ஆனால், இந்த தேர்தல், ஊழலுக்கும், நல்லாட்சிக்கும் இடையேயான போட்டி. இதில், தி.மு.க., அரசு ஊழலுடன் நிற்கிறது; அ.தி.மு.க., கூட்டணி நல்லாட்சிக்காக நிற்கிறது.

பெண்களுக்கு அதிகாரமளிக்க, இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றும் நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., கூட்டணி கட்சியினர், இந்த சட்டத்தை எதிர்த்து, பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link