சாத்துார் தொகுதியில் தி.மு.க.,-பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆதிக்கம்சாத்துார் சட்டசபை தொகுதி சாத்துார் நகராட்சியில் துவங்கி ராஜபாளையம் முறம்பு வரை உள்ளது. இங்கு மறவர் சமுதாயத்தினரின ஓட்டுகள் பெரும்பான்மையாக உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக 2011 ல் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார், 2016ல் எதிர்கோட்டை எஸ். ஜி. சுப்பிரமணியன், 2019ல் இடைத்தேர்தலில் எம். எஸ். ஆர். ராஜவர்மன் என மறவர் சமுதாயத்தை சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்றனர்.
2021ல் சட்டசபை தேர்தலில் தி.மு.க வலுவான கூட்டணி அமைத்தது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க வேட்பாளர் மேற்கு மாவட்ட செயலாளர்
நம்பிக்கை
ஆர். கே. ரவிச்சந்திரன், 62995 ஓட்டு பெற்றார். இவரை விட தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க.வேட்பாளர் ரகுராமன் 74,174 ஒட்டு பெற்று 11,179 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இதையெல்லாம் கணக்கு போட்டு பார்த்த பா.ஜ.,வினர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தைரியமாக போட்டியிடுங்கள் வெற்றி நிச்சயம் எனக் தெரிவித்தாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீது பிள்ளைமார் சமுதாயத்தினரும், மறவர் சமுதாயத்தினரும் அதிருப்தியில் இருப்பதாகவும் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிப்பதாலும்
அதிருப்தி
பா.ஜ.,விற்கு எதிரான மனநிலையில் உள்ளதாலும் தொகுதியை மாற்ற முடிவு செய்தார். நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான ஜோதிடர் ஒருவர் ‘நீங்கள் தொகுதி மாறி நின்றால்தான் நல்லது’ என்று கூறியதாலும், சாத்துார் தொகுதியை நயினார் நாகேந்திரன் தேர்வு செய்துள்ளார்.
இத்தொகுதியில் 2011ல் ஆர்.பி .உதயகுமாரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கடற்கரை ராஜ்க்கு தற்போது மீண்டும் தி.மு.க., ‘சீட்’ வழங்கியுள்ளது. அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் ஆதரவாளர் விசுவாசி என்பதால் எப்படியாவது ராஜை
ஜோதிடர் கணிப்பு
வெற்றி பெற வைக்க வேண்டும் என தி.மு.க.,வினர் முனைப்பாக உள்ளனர். அதே நேரத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் எந்த அளவிற்கு ஓட்டுகளை பிரிக்கின்றனவோ அதுதான் வெற்றியையும் தீர்மானிக்கும் என்ற சூழல் நிலவுகிறது.
ஒருபக்கம் அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் இறங்கி வேலை செய்யும் தொண்டர்கள் இருக்க தொகுதி மாறி போட்டியிட்டாலும் நயினார் நாகேந்திரனின் வெற்றிக்கு பா.ஜ.,நிர்வாகிகள் களத்தில் இறங்கி உழைப்பதே தீர்மானிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
