சாத்தூர் அருகே பட்டாசு‌ ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

தொடர்ந்து நான்கு முறைக்கு மேல் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சாத்தூர், சிவகாசி பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

இந்த வெடிவிபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து தொழிலாளர்கள் ஒருவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வெடித்து சிதறிய பட்டாசுகள் மற்றும் தீயை போராடி தீயணைப்புத் துறையினர் கட்டுப்படுத்தினர்.

Source link