பசல்: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்றது.
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூரின் இங் கீட் வெஸ்லி கோ, ஜுன்சுகே குபோ ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 21-16, 24-22 என சீனதைபேயின் ஜி ரே சென், யூ சி லின் ஜோடியை தோற்கடித்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யாங் மோதினர். இதில் ஏமாற்றிய ஆயுஷ் 18-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இருந்து இந்திய வீரர் பிரனாய் விலகியதால், ஜப்பானின் கோகி வடானபே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா 14-21, 14-21 என, சீனதைபேயின் சியு-பின்-சியானிடம் வீழ்ந்தார்.
