சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதியில் ஆர்சனல்

லண்டன்: இங்கிலாந்தின் லண்டனில், பெண்களுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து அரையிறுதி நடந்தது. இதில் இங்கிலாந்தின் ஆர்சனல், செல்சி அணிகள் மோதின. முதல் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்சனல் அணி, 2வது போட்டியில் 0-1 என தோற்றது. இரண்டு போட்டிகளின் முடிவில் ஆர்சனல் அணி 3-2 (3-1, 0-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

மூன்றாவது சுற்றில் பெகுலா

சார்லஸ்டன்: அமெரிக்காவில், சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 4-6, 6-4, 7-5 என, கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் மடிசன் கீஸ் 6-2, 6-3 என குரோஷியாவின் டோனா வேகிக்கை தோற்கடித்தார். கனடாவின் பியான்கா 4-6, 4-6 என, அமெரிக்காவின் சோபியா கெனினிடம் தோல்வியடைந்தார்.

எக்ஸ்டிராஸ்

* ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், சப்-ஜூனியர் பெண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் நடக்கிறது. லீக் போட்டியில் கோவா அணி 6-3 என, தெலுங்கானாவை வீழ்த்தியது. உத்தரகாண்ட் அணி 6-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகாவை வென்றது. சண்டிகர் அணி 12-1 என, குஜராத்தை தோற்கடித்தது.

* ஜம்மு காஷ்மீரில் நடந்த ‘ஐ-லீக்’ கால்பந்து போட்டியில் டைமண்ட் ஹார்பர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் காஷ்மீர் அணியை வீழ்த்தியது. கோவாவில் நடந்த டெம்போ, நாம்தாரி அணிகள் மோதிய போட்டி 1-1 என, ‘டிரா’ ஆனது.

* ஹாங்காங்கில், உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய தகுதிச் சுற்று நடக்கிறது. இதன் காலிறுதியில் இந்திய வீராங்கனை தான்வி கன்னா 0-3 (8-11, 7-11, 3-11) என்ற கணக்கில் மலேசியாவின் ஐனா அமனியிடம் தோல்வியடைந்தார்.

* மாலத்தீவில் இன்று நடக்கவுள்ள தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (20 வயது) 8வது சீசனுக்கான பைனலில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தானை வென்ற இந்தியா, அரையிறுதியில் பூடானை தோற்கடித்தது.

* ”இளம் இந்திய வீரர்கள் கோல்ப் விளையாட வேண்டும். இது, வீரர்களின் மன அழுத்தத்தை குறைக்கும்,” என, முன்னாள் இந்திய ‘ஆல்-ரவுண்டர்’ யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Source link