மாட்ரிட்: ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து, ‘பிளே-ஆப்’ போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), பென்பிகா (போர்ச்சுகல்) அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 3-1 (1-0, 2-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று, ‘நாக்-அவுட்’ சுற்றுக்குள் நுழைந்தது. மற்றொரு போட்டியில் பிரான்சின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி 5-4 (3-2, 2-2) என, சகநாட்டை சேர்ந்த மொனாகோ அணியை வீழ்த்தியது.
லாரஸ் துாதர் கவுரவம்
புதுடில்லி: அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் 28. ஒலிம்பிக்கில் 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் கைப்பற்றிய இவருக்கு, 4 முறை (2017, 2019, 2020, 2025) லாரஸ் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் லாரஸ் விளையாட்டு அமைப்பின் துாதராக சிமோன் பைனல்ஸ் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
எக்ஸ்டிராஸ்
* புனேயில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல் 6-7, 6-0, 3-6 என, பிரிட்டனின் பெலிக்ஸ் கில்லிடம் தோல்வியடைந்தார்.
* ஜெர்மன் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-12, 21-11 என, போலந்தின் மிகோலாஜ் சிமானோவ்ஸ்கியை வீழ்த்தினார்.
* பர்மிங்காமில் நடக்கவுள்ள ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் (மார்ச் 3-8) முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனாவின் ஷி யூ கி மோதுகின்றனர். இந்திய வீராங்கனை சிந்து, தாய்லாந்தின் சுபனிதாவை எதிர்கொள்கிறார்.
