'சிக்சர் மன்னன்' கெய்ல்

ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக சிக்சர் பறக்கவிட்ட வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர், 142 போட்டியில், 357 சிக்சர் விளாசினார். அடுத்த நான்கு இடங்களில் ரோகித் (302 சிக்சர், 272 போட்டி), கோலி (291 சிக்சர், 267 போட்டி), தோனி (264 சிக்சர், 278 போட்டி), டிவிலியர்ஸ் (251 சிக்சர், 184 போட்டி) உள்ளனர்.

110 சதம்

இதுவரை 110 சதம் பதிவாகி உள்ளன. மொத்தம் 58 பேர் சதம் விளாசினர். இதில் 30 இந்தியர், 28 வெளிநாட்டு வீரர்கள் அடங்குவர். அதிகபட்சமாக 2024ல் 14, 2023ல் 12 சதம் பதிவாகின.

* முதல் சதத்தை கொல்கட்டாவின் பிரண்டன் மெக்கலம் (2008, எதிர்: பெங்களூரு) பதிவு செய்தார்.

* அதிகபட்சமாக கோலி 8 சதம் அடித்துள்ளார். பட்லர் 7, கெய்ல் 6, ராகுல் 5, வார்னர், வாட்சன், சுப்மன் கில் தலா 4, டிவிலியர்ஸ், சஞ்சு சாம்சன் தலா 3, பிரண்டன் மெக்கலம், கில்கிறிஸ்ட், சேவக், முரளி விஜய், ஆம்லா, ரகானே, தவான், ஸ்டோக்ஸ், குயின்டன், சூர்யகுமார், பேர்ஸ்டோவ், ருதுராஜ், ஜெய்ஸ்வால், ரோகித், ரிஷாப் பன்ட், கிளாசன், சாய் சுதர்சன் தலா 2 சதம் விளாசினர்.

* மைக்கேல் ஹசி, சைமண்ட்ஸ், ஜெயசூர்யா, ஷான் மார்ஷ், மணிஷ் பாண்டே, யூசுப் பதான், ஜெயவர்தனே, வால்தாட்டி, சச்சின், பீட்டர்சன், ரெய்னா, டேவிட் மில்லர், சிம்மன்ஸ், சகா, ஸ்டீவ் ஸ்மித், அம்பதி ராயுடு, மயங்க் அகர்வால், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதர், ஹாரி புரூக், வெங்கடேஷ் ஐயர், பிரப்சிம்ரன் சிங், கிரீன், டிராவிஸ் ஹெட், நரைன், ஸ்டாய்னிஸ், வில் ஜாக்ஸ், மிட்சல் மார்ஷ், வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, பிரியான்ஷ் ஆர்யா, இஷான் கிஷான் தலா ஒரு சதம் அடித்தனர்.

175 ரன்

ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய வீரர்கள் பட்டியலில் பெங்களூருவின் கிறிஸ் கெய்ல் (175* ரன், எதிர்: புனே, 2013) முதலிடம். அடுத்த இரு இடங்களில் கொல்கட்டாவின் பிரண்டன் மெக்கலம் (158* ரன், எதிர்: பெங்களூரு, 2008), ஐதரபாத்தின் அபிஷேக் சர்மா (141 ரன், எதிர்: பஞ்சாப், 2025) உள்ளனர்.

ஆட்ட நாயகன்

அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்களுக்கான பட்டியலில் டிவிலியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இவர், 25 முறை இவ்விருது வென்றுள்ளார். இவரை அடுத்து கெய்ல் 22, ரோகித் 21, கோலி 19, வார்னர், தோனி தலா 18, யூசுப் பதான், வாட்சன் தலா 16, ராகுல், ஜடேஜா தலா 15 முறை இவ்விருதை கைப்பற்றினர்.

தொடர் நாயகன்

அதிக முறை சிறந்த வீரருக்கான தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள் பட்டியலில் சுனில் நரைன் (2012, 2018, 2024) முதலிடம். வாட்சன் (2008, 2013), ஆன்ட்ரி ரசல் (2015, 2019) தலா 2, கில்கிறிஸ்ட் (2009), சச்சின் (2010), கெய்ல் (2011), மேக்ஸ்வெல் (2014), கோலி (2016), ஸ்டோக்ஸ் (2017), ராகுல் (2020), ஹர்ஷல் படேல் (2021), பட்லர் (2022), சுப்மன் கில் (2023), சாய் சுதர்சன் (2025) தலா ஒரு முறை இவ்விருதை கைப்பற்றினர்.

பைனல் ‘ஹீரோ’

யூசுப் பதான் (ராஜஸ்தான், 2008), கும்ளே (பெங்களூரு, 2009), ரெய்னா (சென்னை, 2010), முரளி விஜய் (சென்னை, 2011), மன்விந்தர் பிஸ்லா (கொல்கட்டா, 2012), போலார்டு (மும்பை, 2013), மணிஷ் பாண்டே (கொல்கட்டா, 2014), ரோகித் சர்மா (மும்பை, 2015), பென் கட்டிங் (ஐதராபாத், 2016), குர்னால் பாண்ட்யா (மும்பை, 2017), ஷேன் வாட்சன் (சென்னை, 2018), பும்ரா (மும்பை, 2019), டிரண்ட் பவுல்ட் (மும்பை, 2020), டுபிளசி (சென்னை, 2021), ஹர்திக் பாண்ட்யா (குஜராத், 2022), கான்வே (சென்னை, 2023), ஸ்டார்க் (கொல்கட்டா, 2024), குர்னால் பாண்ட்யா (பெங்களூரு, 2025) ஆகியோர் பைனலில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருது வென்றனர்.

Source link