சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்ல இருந்த ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவை, சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்றனர். இதுகுறித்து காணலாம்.
தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தொழில் அதிபர் ஜெம் வீரமணி மீதான பாலியல் மற்றும் போக்சோ வழக்கு தினந்தோறும் பூதாகரமாக வெடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரது மேலாளர் சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் இன்று ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா சிங்கப்பூர் செல்ல இருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
விமான நிலையத்தில் போலீசார் அதிரடி
ஜெம் வீரமணிக்கு எதிராக இதுவரை ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பகல் 2.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் செல்ல இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்க்ப்பட்ட நிலையில் ஜெம் வீர்மணியை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் வந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஜெம் வீரமணி மகள் அர்ச்சனா இருக்கிறார். அவரை ஆப் லோட் செய்து இறக்கி விடும் படி போலீசார் கோரிக்கை வைத்தனர்.
விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அர்ச்சனா
இதையடுத்து போலீசார் கோரிக்கையை ஏற்ற விமான நிலைய அதிகாரிகள், அர்ச்சனாவை விமானத்தில் இறக்கனினர். அவரது உடமைகளும் இறக்கப்பட்டனர். பின்னர் சிறப்பு புலனாய்வு போலீசார் அர்ச்சனாவை விசார்ணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
இதுவரை இந்த ஜெம் வீரமணி வழக்கு தீவிரமடையத் தொடங்கிய நாள் முதல் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் என முழுவதும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும், அவரது ஊழியர்கள் மட்டுமே போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கு உதவியாக இருந்த அவரது மேலாளர் சக்திவேல் கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை பணம் பெற்ற போலீசார்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
காவல்துறை முன்னெடுத்த நடவடிக்கைகள்
ஜெம் வீரமணி மீது புகார் அளிக்க சிறப்பு எண் வெளியீடு ஜெம் வீரமணி, உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மீது குண்டாஸ் பதியப்பட்டது அடுத்தடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ஜெம் வீரமணியிடம் பணிபுரிந்த ஊழியர்கள் கைது
குண்டாஸ் சட்டம் பாய்ந்தது
சிறுமிகள் மீதான தொடர் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் சமூகத்தில் பொது ஒழுங்கிற்கு விளைவிக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் (Goondas Act) கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஜெம் வீரமணி மகள் விசாரணையின் பின்னணி?
இதுவரை ஜெம் வீரமணியின் வழக்கில் பல கோடி கணக்கில் பணம் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கை முடித்து வைக்கவும், வழக்கில் இருந்து ஜெம் வீரமணியை காப்பாற்றவும், பணம், சொத்துகள் என பல வழியில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் ஜெம் வீரமணி வழக்கில் கைமாற்றப்பட்ட பணம் விவகாரத்தில் அர்ச்சானவிற்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளவே சிறப்பு போலீசார் அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
Source link
