சிட்டி யூனியன் வங்கி நிகர லாபம் ரூ.332 கோடி

கும்பகோணம்; சிட்டி யூனியன் வங்கி, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டான அக்., முதல் டிச., வரை 332 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின், காலாண்டு அறிக்கையை, அதன் நிர்வாக இயக்குநர் காமகோடி வெளியிட்டார். அதில், கூறியிருப்பதாவது:

மூன்றாம் காலாண்டில், வங்கியின் நிகர லாபம் 16 சதவீதம் அதிகரித்து 332 கோடி ரூபாயாகவும், மொத்த வருமானம் 17 சதவீதம் அதிகரித்து 2,001 கோடி ரூபாயாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் டிச., வரையான ஒன்பது மாதங்களில், வர்த்தகம் 21 சதவீதம் உயர்ந்து 1,31,408 கோடி ரூபாயானது.

இந்த காலகட்டத்தில் நிகர வாராக்கடன் 0.78 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link