சின்னமனூர்: ''முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பத்தாண்டுகளாக எண்ணற்ற சோதனைகள் சூழ்ந்தன. பல

சின்னமனூர்: ”முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பத்தாண்டுகளாக எண்ணற்ற சோதனைகள் சூழ்ந்தன. பல இம்சைகளை சந்தித்தேன். தற்போது தான் மகிழ்ச்சியாக உள்ளேன்,” என, தேனி மாவட்டம் சின்னமனூரில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஓபிஎஸ் பேசினார்.

அவர் பேசியதாவது : டில்லியில் மத்தியமைச்சர் ஒருவரை சந்திக்க நேரம் கேட்டேன். அவர் வர கூறினார். யார் யாரை கூட்டி வருகிறீர்கள், கார் நம்பர் என்ன, எத்தனை பேர் வருகிறீர்கள் என கேட்டார்கள். நானும் தகவல் கூறினேன். டில்லியில் அவரது இல்லத்தில் 15 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டு திடீரென அவரது உதவியாளர் வந்து, அமைச்சர் உங்களை பார்க்க விரும்பவில்லை என்றார்.

நான் முதல்வராக இருந்தவன். கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவன். எவ்வளவு பெரிய அவமானம். டில்லியில் நிருபர்களிடம் தப்பித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது, ”எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,” எனக்கூறி சென்றேன். மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மக்கள் ஓட்டு போட்டு முதல்வரானவர்கள்.

ஆனால் இபிஎஸ்ஐ சசிகலா முதல்வராக்கினார். இன்றைக்கு எந்த அளவிற்கு அவரிடம் நன்றி கெட்டவராக நடந்து கொண்டிருக்கிறார். நானும் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டேன். ஜெயலலிதா கேட்ட போது தங்க தாம்பாளத்தில் வைத்து பதவியை திருப்பி கொடுத்து விட்டு வந்தேன். தி.மு.க.,வில் எந்த எதிர்பார்ப்பு இன்றி சாதாரண தொண்டனாக இணைந்துள்ளேன். இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

Source link