'சிபில் ரிப்போர்ட்' தேவையில்லை ஆலோசகர் பதிவு இனி 'ஈஸி'

நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பதிவு செய்த முதலீட்டு ஆலோசகர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவும், அவர்களுக்கான பதிவு செய்யும் முறையை எளிதாக்கவும் ‘செபி சேது’ எனும் புதிய டிஜிட்டல் தளத்தை ‘செபி’ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

மேலும், முதலீட்டு ஆலோசகர்கள் பதிவு முறையில் இருந்த பல்வேறு சிக்கலான நடைமுறைகளை செபி தற்போது தளர்த்தியுள்ளது. இந்தியாவில் தற்போது 22 கோடிக்கும் அதிகமான ‘டிமேட்’ கணக்குகள் உள்ளன.

ஆனால், அவற்றுக்கு வழிகாட்ட அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதலீட்டு ஆலோசகர்களின் எண்ணிக்கை 1,000க்கும் குறைவாகவே உள்ளது.

நிபந்தனைகளில் தளர்வு

* இனி எந்தவொரு பட்டதாரியும் ‘என்.ஐ.எஸ்.எம்.,’ சான்றிதழ் பெற்று, முதலீட்டு ஆலோசகராக பதிவு செய்யலா ம்

* பதிவு செய்ய இனி ‘சிபில் ரிப்போர்ட்’, ‘சொத்து மதிப்பு சான்றிதழ்’ போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டியதில்லை

* முதலீட்டாளர்கள் ஏற்கனவே வாங்கியுள்ள காப்பீடு அல்லது மியூச்சுவல் பண்டு போன்ற திட்டங்களை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினால், அதற்காக கட்டணம் வசூலிக்க ஆலோசகர்களுக்கு செபி அனுமதி

* ஆய்வின் கீழ் உள்ள மொத்த சொத்து மதிப்பில், ஆண்டுக்கு அதிகபட்சமாக 2.5 சதவீதம் வரை இந்த ஆலோசனை கட்டணம் இருக்கலாம்

* ஆலோசகர்கள் தங்களின் கடந்த கால செயல்பாட்டு தரவுகளை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Source link