சிம்மம் : `எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்! ஏன் தெரியுமா?' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மராசியின் அதிபதி சூரியன். அவர் கிரக நாயகன்; ஆத்ம காரகன். சிம்மம் ஸ்திர ராசி. சமுதாயத்தில் அந்தஸ்தும் அங்கீகாரமும் தேடிவரும். சூழலைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். நீங்கள் எங்கும் எதிலும் முதன்மையானவராகச் செயல்படுவீர்கள். உங்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி எப்படி?

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:

1. உங்கள் ராசிக்கு, வாக்கிய பஞ்சாங்கப்படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, அஷ்டமத்துச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார் சனி பகவான். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அவ்வப்போது எதிர்மறைச் சிந்தனைகள் தலைதூக்கும்.

2. குடும்ப விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் முன்பு தக்க ஆலோசனை தேவை. குலதெய்வப் பிரார்த்தனைகள் உங்களைப் பலப்படுத்தும்.

3. குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து போகும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கொஞ்சம் கடன் வாங்க வேண்டி வரும். அத்தியாவசியச் செலவுகளால் கையிருப்பு கரையும். பூர்விகச் சொத்துப் பங்கைப் பெறுவதில் சிரமங்கள் உண்டு.

4. எனினும் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் முதல் நான்கு மாதங்கள், சில காரியங்கள் நல்லபடி நடந்தேறும். சொந்த ஊரில் செல்வாக்கு உயரும். சொத்துப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலும்.

சனி பகவான்

5. சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் 2.4.2026 முதல் 14.4.2027 வரையிலான காலத்தில், கடன் பிரச்னைகளில் கவனம் தேவை. வீண் செலவுகளை அறவே தவிருங்கள். வீட்டில், வீண் வாக்குவாதம், தேவையில்லாத சந்தேகங்கள் வேண்டாம்.

6. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை ரேவதியில் சஞ்சரிக் கும் போது குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். எதிர் பார்த்த பணவரவு உண்டு. பேச்சால் சாதிப்பீர்கள். செல்வாக்கு உயரும்.

7. சனி பகவான் வக்ரகதியில் செல்லும் 15.7.2026 முதல் 30.11.2026 வரையிலான காலத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பண வரவும் திருப்தியாக இருக்கும்.

8. இந்தப் பெயர்ச்சிக்காலத்தில் சனி பகவான் மீனத்தில் அமர்ந்து, உங்கள் ராசிக்கு 2, 5-ம் வீடுகளைப் பார்ப்பதால், எதிர்பார்த்த திடீர் பண வரவு உண்டு. பேச்சால் சாதிப்பீர்கள் என்றாலும், உணர்ச்சி வயப்படாமல் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தாரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.

9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். பணிக்குச் செல்லும் பெண்கள், விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். சில காரியங்களில் உங்களின் நடவடிக்கைகள் பாராட்டப்பெறும்.

10. வியாபாரிகள் இந்தக் காலக்கட்டத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்த்துவிடுங்கள். வாடிக்கையாளர்களிடம் கடுமை காட்ட வேண் டாம். புதுத்துறைகளில் இறங்குகிறீர்கள் எனில், தக்க ஆலோசனையும் வழிகாட்டலும் தேவை. தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரிப் பாகங்கள் மூலம் லாபம் வர வாய்ப்பு உண்டு. எவருக்கும் பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்கவேண்டாம்.

11. உத்தியோகத்தில், அலுவலகத்தில் வேலை அதிகரிக்கும். பணி சார்ந்து அதிகாரிகள், சக ஊழியர்கள் குறித்து எவ்வித விமர்சனமும் கூடாது. முக்கிய ஆவணங்களைக் கவனமாகக் கையாளுங்கள். சிலருக்கு, வெளிநாட்டில் வேலை கிடைக்கும். வேறு நிறுவத்திலிருந்தும் புது வாய்ப்புகள் வந்துசேரும்.

Source link