சியோல்:: ராணுவ சட்டத்தை அமல்படுத்த முயன்ற குற்றத்துக்காக தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள்

சியோல்:: ராணுவ சட்டத்தை அமல்படுத்த முயன்ற குற்றத்துக்காக தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்காசிய நாடான தென்கொரியாவில், 2024 டிசம்பரில் அப்போதைய அதிபர் யூன் சுக் இயோல், எதிர்க்கட்சிகள் நாட்டை முடக்குவதாகக் கூறி திடீரென நள்ளிரவில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார்.

உடனடியாக பார்லிமென்ட் கூடி, ராணுவ சட்டத்துக்கு எதிராக ஓட்டளித்தது. இதையடுத்து சில மணி நேரங்களில், ராணுவச் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, யூனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வந்ததையடுத்து, 2024 டிசம்பர் 14ல் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சியோல் நீதிமன்றம், யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

Source link