துபாய்: ஐ.சி.சி., சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் அருந்ததி தேர்வு செய்யப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் அருந்ததி, இலங்கையின் ஹர்ஷித்தா, பாகிஸ்தானின் பாத்திமா என 3 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.
தற்போது, அருந்ததி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்திய ஆஸ்திரேலிய ‘டி-20’ தொடரில் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது. இதில் வேகத்தில் அசத்திய அருந்ததி, 3 போட்டியில் (4/22, 2/30, 2/35) மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தி, கைகொடுத்தார்.
அருந்ததி கூறியது:
ஐ.சி.சி., மாத விருது வென்றது பெருமையாக உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. வெற்றிக்கு உதவியதால் விருது கிடைத்துள்ளது, மிகவும் ‘ஸ்பெஷலானது’.
இவ்வாறு அவர் கூறினார்.
