சிறப்பு முதலீட்டு நிதியின் சொத்து மதிப்பு ரூ.10,000 கோடியை நெருங்குகிறது

இ ந்திய நிதி சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ.எப்., எனப்படும் சிறப்பு முதலீட்டு நிதிகள், மிகக்குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த அக்டோபர் 2025ல் வெறும் 2,010 கோடி ரூபாயாக இருந்த இந்த வகை நிதிகளின் மொத்த மதிப்பு, கடந்த பிப்ரவரி மாத இறுதிக்குள் 9,711 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, நிதி சேவைகள் ஆய்வு நிறுவனமான ‘வேல்யூமெட்ரிக்ஸ்’ தெரிவித்துள்ளது.

Image 1547549

இந்திய மியூச்சுவல் பண்டு சங்கமான ‘ஆம்பி’ வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும், சந்தையின் ஏற்ற இறக்கங்களை சமாளிக்கும் ‘ஹைபிரிட் லாங்-ஷார்ட்’ உத்தி கொண்ட திட்டங்களில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் இந்நிறுவனம் கூறியுள்ளது.

தற்போது சந்தையில் மொத்தம் 11 சிறப்பு முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில், இதுவரை 39,851 கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாகவும்; ஒவ்வொரு கணக்கிலும் சராசரியாக 24.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் நிர்வகிக்கப்படுவதாகவும் வேல்யூமெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.

எஸ்.ஐ.எப்., சொத்துமதிப்பு: விவரம் மதிப்பு / எண்ணிக்கை ஹைபிரிட் லாங் – ஷார்ட் பண்டு ரூ.7,389 கோடி 76% ஈக்விட்டி லாங் – ஷார்ட் பண்டு ரூ.2,322 கோடி 24% ————மொத்த சொத்து மதிப்பு ரூ.9,711 கோடி

Source link