சிறுபான்மை மக்களுக்கு காவலாக தி.மு.க., திகழ்கிறது. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க.,வும் சேர்ந்து கொண்டு தமிழகத்துக்கு

சிறுபான்மை மக்களுக்கு காவலாக தி.மு.க., திகழ்கிறது. பா.ஜ.,வுடன் அ.தி.மு.க.,வும் சேர்ந்து கொண்டு தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது. சி.ஏ.ஏ., சட்டத்தை பா.ஜ., கொண்டு வந்தபோது, அ.தி.மு.க., அதை ஆதரித்து ஓட்டு போட்டது. நான் பொது வாழ்க்கைக்கு வந்தபோது, எதிர்கொண்ட முதல் கைது நடவடிக்கை, சி.ஏ.ஏ., சட்டத்தை கிழித்ததால் தான் நிகழ்ந்தது. சிறுபான்மையின மக்களுக்கு உள் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, தி.மு.க., தான் கொடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அடிமை கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளனர். மோடிக்கு பழனிசாமிதான் முரட்டு அடிமை. தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் தான், மொழி, இனம் மற்றும் மாநில உரிமைகளை மீட்டெடுக்க முடியும்.

– உதயநிதி, துணை முதல்வர், தி.மு.க.,

Source link