புதுடில்லி: ரியல் எஸ்டேட் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை செயல்படுத்த தவறும் வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா பார்லி.,யில் கூறியதாவது:
ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை ஒதுக்கீடுதாரர் (உரிமையாளர்) செயல்படுத்த தவறினால், அவருக்கு இதுவரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதற்கு பதிலாக, அவர் வாங்கியுள்ள வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்பு, கட்டடத்தின் மதிப்பில் 10 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ‘ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா- 2026’ வாயிலாக, இது மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
