சிவகங்கை மாவட்டம், புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுள்ளான் மதன் எனச் சொல்லப்படும் பிரபல ரவுடி, கடந்த அக்டோபர் 18ஆம் தேதி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட வெட்டிக் கொலை
மஞ்சுவிரட்டு போட்டியை நண்பர்களுடன் காணச் சென்ற சுள்ளான் மதன், கரும்புத் தோட்டத்தில் மர்மக் கும்பலால் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் ஏற்கனவே போலீசார் பலரைக் கைது செய்து வருகின்றனர். மேலும், 70-க்கும் மேற்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை மூடியிருக்கின்றனர்.
ரவுடிகளாக உருவாகும் இளைஞர்கள்?
தென் மாவட்டங்களில் சாதிய ரீதியிலான மோதல்கள் இன்னும் கொஞ்சம்கூடத் தணியாத சூழலில், அந்தப் பகுதியில் சின்னச் சின்ன குழுக்களாக இணைந்து சிலஇளைஞர்கள் ரவுடிகளாக உருவாகி வருகின்றனர். இவர்களின் விளம்பர நடவடிக்கைகளுக்காகச் சமூக வலைதளக் கணக்குகளைப் பயன்படுத்தி, ஆயுதங்களுடன் இருப்பது போன்ற வீடியோக்களையும் ரீல்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த சுள்ளான் மதன்
இந்தச் சூழலில்தான், கடந்த 18ஆம் தேதி கொல்லப்பட்ட சுள்ளான் மதன் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்தவர். அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த சூழலில், அவர் கொல்லப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்திருந்தார்.
மிதுன் மாணிக்கம் மீது குற்றச்சாட்டு: இன்ஸ்டாகிராமில் வெடித்த கேங் மோதல்
இந்தச் சூழலில், சுள்ளான் மதனின் கொலைக்குக் காரணம் மிதுன் மாணிக்கம் என்ற மற்றொரு ரவுடி கூலிப்படையை ஏவிச் சுள்ளான் மதனைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த இரண்டு கேங்குகளுக்கும் இடையில் இன்ஸ்டாகிராமிலேயே தகராறு ஆரம்பித்திருக்கிறது.
சுள்ளான் மதனின் கொலைக்குப் பழிவாங்கப்படும் என்றும், “அடுத்து உங்கள் முறை”, “பகையே, காத்திரு” என்றும் தொடர்ச்சியாக இதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
சிவகங்கை சிவப்பாக மாறும் என மிரட்டல்: சிறுவர்களைக் கைது செய்த போலீஸ்
அதுமட்டுமின்றி, சுள்ளான் மதனின் கொலைக்காகச் சிவகங்கை சிவப்பாக மாறும் என்றெல்லாம் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தனர். இவற்றில் பெரும்பான்மையானவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்களை உடனடியாகப் பிடித்த காவல்துறை, சுள்ளான் மதன் கேங்கைச் சேர்ந்தவர்களை மன்னிப்புக் கேட்டு வீடியோவெளியிட வைத்திருக்கிறது.
இந்த வீடியோவில், “லைக்ஸ்களுக்காகவும், யாருக்காகவும் இப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறேன். யாரும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். இதற்காக மன்னிப்புக் கேட்டு வருந்துகிறோம்” என்று அவர்கள் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.
Google-ஐ அலரவைக்கும் TVK! TVK Vijay Madurai Manaadu
சிவகங்கையையே கதற விடுவோம்- என்ற சுள்ளான் பாய்ஸ்:
சிவகங்கையையே கதற விடுவோம் என்று சொன்ன சுள்ளான் பாய்ஸைக் காவல்துறை மன்னிப்புக் கேட்க வைத்து வீடியோ வெளியிடச் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
Source link
