சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சோழபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 70. இவர், அங்குள்ள கோவிலில் பணிபுரிந்தார். 2024

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சோழபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 70. இவர், அங்குள்ள கோவிலில் பணிபுரிந்தார். 2024 செப்., 13ல் கோவிலுக்கு வந்த, 9 வயது சிறுமி, 10 வயது சிறுவன், 12 வயது சிறுவன் ஆகிய மூவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிவகங்கை மகளிர் போலீசார், போக்சோவில் பெரியசாமியை கைது செய்தனர்.

சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், பெரியசாமிக்கு, 178 ஆண்டுகள் சிறை தண்டனையை, ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிப்பதோடு, 8,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி கோகுல்முருகன் நேற்று தீர்ப்பளித்தார்.

Source link