சிவகங்கை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித்கு,மார் வழக்கை நீதிமன்றம்

சிவகங்கை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடப்புரம் கோவில் காவலாளி அஜித்கு,மார் வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் தன் நகைகளை திருடிவிட்டதாக நிகிதா என்பவர் கடந்தாண்டு ஜூன் 27ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் அஜித் குமாரை அழைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தியது. வழக்கில் தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேரின் யெயர்களும் சேர்க்கப்பட்டன. வழக்கில் புகார்தாரரான நிகிதா விசாரிக்க சிபிஐ தரப்பில் மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி நீதிமன்றத்தில் நிகிதா ஆஜரானார்.

இந் நிலையில் இந்த வழக்கு மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச். 09) விசாரணைக்கு வந்தது. அப்போது நிகிதா ஆஜராகி எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்தார். திருடு போனதாக கூறப்படும் நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே வழக்கை முடித்து வைக்கிறோம் என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இதற்கு நிகிதா சம்மதம் தந்ததன் பேரில், நகை திருப்டு புகாரை நீதிமன்றம் முடித்து வைத்தது.

Source link