மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), 2025-ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகளை இன்று (மார்ச்.6) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
நேர்முகத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு அகில இந்திய அளவில் அனுஜ் அக்னிஹோத்ரி முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.
தவிர மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி இந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தி இருக்கிறார்.
அதேபோல ஆகாஷ் தல் என்பவர் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
தேர்வர்கள் தங்களது முடிவுகளை upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.
