கொச்சி: சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் தென் மண்டல தலைவராக ரவிச்சந்திரன் புருஷோத்தமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வரும் 2026- — 27 நிதியாண்டில் தலைவராக செயல்படுவார்.
இவர், 1.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டென்மார்க் நிறுவனமான டான்பாஸின் இந்திய பிரிவு தலைவராக உள்ளார்.
தொழில்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்ற இவர், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை கார்பன் குறைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
