சென்னை: நடிகை நயன்தாரா குறித்து, சர்ச்சைக் குரிய வகையில் பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது, மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை துவக்கிஉள்ளது.
கடந்த 17ம் தேதி விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், நடிகை நயன்தாரா பெயரை குறிப்பிட்டு பேசியது, பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில், சி.வி.சண்முகம் மீது, மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணையை துவக்கியுள்ளார்.
சண்முகம் ராஜ்யசபா எம்.பி., என்பதால், பார்லிமென்ட் செயலரிடம் புகார் அளிக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.,க்கு பரிந்துரைக்கவும், மாநில மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.
