சீட் கிடைக்காவிட்டாலும் அண்ணாமலையின் பெருந்தன்மை

2026 சட்டமன்றத் தேர்தலில் , தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலைக்கு சீட்டு எதுவும் ஒதுக்கவில்லை.ஆனாலும் ,  அண்ணாமலை பாஜக வேட்பாளர்களுக்கு வாழ்த்து கூறியது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தல்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜக வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். திமுகவின் ஊழல், செயலற்றத்தன்மை , துரோகம் ஆகியவற்றால் சலிப்படைந்துள்ள தமிழகத்தின் ஒவ்வொரு சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவையும் பாஜகவினர் பெற்றுள்ளனர். 

நமது மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திரமோடி  அவர்களின் தொலைநோக்கு மிக்க தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும்,  ஒரு தெளிவான நோக்கத்துடனும் பெரிய அளவில் முன்னேறி வருகிறது. அதே வேளையில், தோல்வியடைந்த, ஆணவம் நிறைந்த மற்றும் சுயநலம் மட்டுமே கொண்ட திமுக அரசால் தமிழகம் பின்தள்ளப்பட்டுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் தேஜ கூட்டணி 210 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன், ஒரு செயல்வீரனாகிய நான்,  பாஜக மற்றும் பிற தேஜ கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வேன்! என்று தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Source link