சீதைக்கு சுருட்ட முடினு ராமாயணத்துல இல்லையே: சாய் பல்லவி குறித்து ‘OG சீதா ‘ – sita is not described as someine with curly hair in ramayana: dipika chikhlia

தீபிகா கருத்து: ராமானந்த் சாகரின் ராமாயண் தொலைக்காட்சி தொடரில் சீதையாக நடித்தவர் தீபிகா சிக்லியா. அவர் பல படங்கள், சீரியல்களில் நடித்த போதிலும் இன்று வரை அவரை சீதையாகவே பார்க்கிறார்கள் மக்கள். தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான ராமாயண் சீரியலை 80ஸ் கிட்ஸுகள் முதல் 2கே கிட்ஸுகள் வரை பார்த்திருக்கிறார்கள். சீதை என்றால் அது தீபிகா தான் என ரசிகர்கள் ஃபிக்ஸ் ஆகிவிட்டார்கள்.

இந்நிலையில் நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் ராமாயணா படத்தில் சீதா கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் சாய் பல்லவி. சீதா குறித்து ஒரிஜினல் சீதாவான தீபிகா கூறியிருப்பதாவது, நான் சாய் பல்லவி நடித்த படங்களை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான நடிகை. ஆனால் அவர் சீதாவாக எப்படி இருப்பார் என எனக்கு தெரியவில்லை. படம் பார்த்தால் தெரிந்துவிடும். துளசிதாஸின் ராமாயணத்தில் சீதா என்றால் அவரின் கண்கள் இப்படி இருக்கும், உயரம் இவ்வளவு, முடி இப்படி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தான் ராமானந்த் சாகர் சீதாவை தேடி என்னை கண்டுபிடித்தார்.

முடி விபரம்: ராமாயணா படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறந்த கலைஞர்கள். அவர்கள் அந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக இருந்தால் நல்லது தான். மக்கள் என் நிஜ பெயரை மறந்தாலும் சீதா கதாபாத்திரத்தை மறக்காமல் என்னை சீதா என்று அழைக்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை சமயத்தில் தூர்தர்ஷனில் எங்கள் ராமாயண் சீரியலை ஒளிபரப்பியதால் புதிய தலைமுறையினரும் பார்த்திருக்கிறார்கள். அதனால் அந்த நினைவை மாற்ற முடியாது. ராமாயணத்தில் சுருட்டை முடி கொண்டவர் சீதா என்று இல்லை என்றார்.

ரசிகர்கள் கொண்டாடும் ராமாயண் சீரியலில் ராமராக நடித்த அருண் கோவில், ராமாயணா படத்தில் தசரதராக நடித்திருக்கிறார். ராமாயணா படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. முதல் பாகம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸாகிறது.

தொடரும் விமர்சனங்கள்: ராமராக நடித்திருக்கும் ரன்பிர் கபூரை விட சீதாவாக நடித்திருக்கும் சாய் பல்லவியை தான் அவ்வப்போது சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள். முன்னதாக ஏக் தின் பட விழாவில் சாய் பல்லவி இந்தியில் பேசிய விதத்தை பார்த்துவிட்டு மொழி தெரியாத இவரை ஏன் சீதாவாக தேர்வு செய்தார்கள் என்று பாலிவுட் ரசிகர்கள் விமர்சித்தார்கள்.

மேலும் மண்டோதரியாக அழகான காஜல் அகர்வால் இருக்கும்போது ராவணன் எதற்காக சுமாரான சாய் பல்லவியை கடத்துவார் என்று கிண்டல் செய்தார்கள். இந்நிலையில் சுருட்டை முடி குறித்து ஒரிஜினல் சீதா சொன்னதை கேட்டதும் ராமாயணாவில் சாய் பல்லவியை நடிக்க வைத்திருக்கவே கூடாது. அவரை பார்த்தால் சீதா ஃபீலே வரவிவ்லை என்கிறார்கள்.

ராமாயணா படம் வந்தால் தானே சாய் பல்லவி சீதாவாக எப்படி நடித்திருக்கிறார் என்பதை சொல்ல முடியும். அப்படி இருக்கும் போது ரிலீஸுக்கு முன்பே அவரை அவ்வப்போது விமர்சிப்பது சரியல்லவே. ஒருவரின் திறமையை பாராட்டாவிட்டாலும் உருவத்தை வைத்து மோசமாக பேசுவது சரியான செயல் இல்லை.
டாக்சிக் யஷ்: இதற்கிடையே டாக்சிக் பட பாடல் வீடியோக்களை பார்த்துவிட்டு இவரை தான் ராவணனாக பார்க்கப் போகிறோமா என்றும் பேசுகிறார்கள். அண்மையில் தபாஹி வீடியோ வந்தபோது நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்காக கியாரா அத்வானியை ரசிகர்கள் விளாசினார்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

அது என்ன யஷ்ஷை யாரும் எதுவும் சொல்லவில்லை. திருமணமான யஷ் இன்னொருவரின் மனைவியுடன் நெருக்கமாக நடித்தது சரி. ஆனால் சித்தார்த் மல்ஹோத்ரா மனைவி கியாரா நடித்தது மட்டும் தவறா என்று அவருக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Source link