தமிழக அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு இடையே எப்போதும் வார்த்தைப் போர் உச்சத்தில் இருப்பது வழக்கம். அந்த வகையில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, சீமான் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ” சீமான்னா யாருணா ?” என்று அலட்சியமாகப் பதில் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் தீயாய் பரவி வருகிறது.
அம்பேத்கர் சிலை விவகாரமும் சீமானின் அறிக்கையும்!
இந்த ஒட்டுமொத்தப் பரப்பரப்பிற்கும் பின்னணியாக அமைந்தது சேலத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கும் விவகாரமாகும்
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் தமிழக அரசை விமர்சித்து ஒரு காரசாரமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து சீமான் வெளியிட்ட இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியது
சீமான்னா யாருணா? – அமைச்சர்!
சேலத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜியிடம், அம்பேத்கர் சிலை விவகாரத்தில் சீமான் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கேள்வியைக் கேட்டவுடன் மைக் முன்னால் அமைச்சர் விஜய் பாலாஜி, “சீமான்னா யாருணா?” என்று செய்தியாளரைப் பார்த்தே பதில் கேள்வி கேட்டு அதிரவைத்தார்
எம்.எல்.ஏ, எம்.பி கேட்டா பதில் சொல்லலாம்!- அமைச்சர் கணக்கு
தொடர்ந்து சீமான் குறித்துப் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, தேர்தல் அரசியலையும் மக்கள் பிரதிநிதித்துவத்தையும் சுட்டிக்காட்டி சீமானை மிகக் கடுமையாக விமர்சித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரோ (MLA) அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ (MP) மக்கள் பிரச்சனை குறித்து ஏதேனும் கேள்வி கேட்டால் அல்லது அறிக்கை விட்டால் அதற்கு நாங்கள் பொறுப்புடன் அரசாங்கத்தின் சார்பில் பதில் சொல்லலாம்
ஆனால், எந்த ஒரு மக்கள் பிரதிநிதித்துவப் பொறுப்பிலும் இல்லாத, ஒருமுறை கூட ஜெயிக்காத சீமான் யார்? அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மிக ஓப்பனாகப் பேசினார்
சமூக வலைத்தளங்களில் முட்டிக்கொள்ளும் தம்பிகள்
அமைச்சர் விஜய் பாலாஜியின் இந்த அலட்சியமான பேச்சு, நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரு தலைவரைப் பார்த்து யாரு என்று கேட்பதா? என நாம் தமிழர் கட்சியினர் அமைச்சருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.அதே நேரத்தில், அமைச்சரின் இந்த அரசியல் கணக்குச் சரியானதே என்று ஆளுங்கட்சி ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருவதால், அரசியல் வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
Source link
