சுக்மா: நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா

சுக்மா: நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமம், முதன்முறையாக மின்சார வசதியைப் பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தின் கோகுண்டா கிராமம் பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும். இதனால், சாலை, மின்சாரம், மருத்துவம் போன்ற எந்த அடிப்படை வசதியும் கிராமத்தில் இல்லை.நக்சல்களுக்கு பயந்து அரசு அதிகாரிகளும் அங்கு சென்றது கிடையாது.இதனால் கிராம மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்தனர்.

இருளில் மூழ்கிக் கிடந்த அந்த கிராமத்துக்கு இப்போது விடிவு காலம் பிறந்துள்ளது.

தற்போது மாவோயிஸ்டுகள் ஒழிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்பு படையினரின் முயற்சியின் கீழ் வளர்ச்சிப்பணிகள் சாத்தியமாகி உள்ளது.

அடர்ந்த காடுகள், சவாலான நிலப்பரப்புகளுக்கு இடையே, சி.ஆர்.பி.எப்., படையினர் உதவியுடன் மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் அமைக்கப்பட்டன.

இதன் மூலம் அங்குள்ள வீடுகள், பொது இடங்களுக்கு மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டன.மின்சார வசதி கிடைத்ததைத் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.சமீபத்தில் இங்கு முதன்முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டன. மாவோயிஸ்டுகளின் நினைவிடங்களும் அகற்றப்பட்டன.

மின்வசதி மூலம் கிராமத்தில் கல்வி, மருத்துவம் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் மேம்படும் நிலை உருவாகியுள்ளதாக ஊர் மக்கள் கூறினர்.

கோகுண்டா கிராமவாசிகள் கூறியதாவது:

முன்னர், இங்கு மின்சாரமோ சாலையோ இல்லை. நாங்கள் இருளில் வாழ்ந்தோம். சிஆர்பிஎப் முகாம் அமைக்கப்பட்ட நிலையில், நக்சல் ஆதிக்கமும் முடிவுக்கு வந்துள்ளது. குடிநீர், சாலை, மின்சார வசதியும் வந்துவிட்டன. மக்கள் இப்போது தான் அரசு நிர்வாகத்தின் பயன்களை அனுபவிக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link