நமது நிருபர்
சுவிட்சர்லாந்தில் பஸ் திடீரென தீ பற்றியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.
மேற்கு சுவிட்சர்லாந்தின் ப்ரிபோர்க் மாகாணத்தில் கெர்சர்ஸ் நகரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சில் புகை மூட்டமாக காட்சி அளித்தது. பிறகு பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற முயன்ற போது, தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பஸ்சில் தீ பற்றியதற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
