சூடுபிடிக்கும் களம்; வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சிபிஎம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து அடுத்தக்கட்ட தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் போக வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்களே  இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, பழனி தொகுதியில் என்.பாண்டி, கந்தர்வக்கோட்டை தொகுதியில் எம்.சின்னதுரை, பத்மநாபபுரம் தொகுதியில் ஆர்.செல்லசுவாமி, திருவொற்றியூர் தொகுதியில் சுந்தர்ராஜன், கீழ்வேளூர் தொகுதியில் டி.லதா ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

Source link