சூதாட்ட சந்தையாக மாறுவதால் பங்கு பரிவர்த்தனை வரி அதிகரிப்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

பங்குச்சந்தையில் சமீபகாலமாக பெருகி வரும் எப் அண்டு ஓ., வர்த்தகமானது, முதலீடு என்பதை தாண்டி, ஒருவிதமான ‘சூதாட்ட சந்தை’ போல மாறி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்துள்ளார்.

எப் அண்டு ஓ., வர்த்தகத்துக்கு எஸ்.டி.டி., உயர்த்தப்பட்டதால் தான் பங்குச் சந்தைகள் பெரிய வீழ்ச்சியை சந்தித்ததாக செய்திகள் பரவிய நிலையில் , மத்திய நிதியமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

எப் அண்டு ஓ., வர்த்தகத்தில் ஈடுபடும் 100 பேரில் 90 பேர் தங்கள் முதலீட்டை இழப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இந்த ஆபத்தான வர்த்தக போக்கை கட்டுப்படுத்தவே, மத்திய பட்ஜெட்டில் எப் அண்டு ஓ., வர்த்தகத்துக்கான பங்கு பரிவர்த்தனை வரி, 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை, அதிக ரிஸ்க் கொண்ட ஊக வணிகத்தில் இழப்பதை தடுக்க வேண்டியது அரசின் கடமை; அதனால் தான் நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்கி வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மூலதன ஆதாய வரி மாற்றப்படவில்லை.

ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கையாள்வதில் ரிசர்வ் வங்கியின் பங்கு முக்கியமானது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link