'சூப்பர்' வீரர் சுப்மன் கில்: பி.சி.சி.ஐ., விருதுக்கு தேர்வு

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கப்படும். இதன்படி, கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய டெஸ்ட், ஒருநாள் போட்டி அணி கேப்டன் சுப்மன் கில் 26, தேர்வு செய்யப்பட்டார்.

2025ல் சுப்மன் விளையாடிய 35 போட்டியில், 7 சதம், 3 அரைசதம் உட்பட 1764 ரன் குவித்தார். இதில் 9 டெஸ்டில், 5 சதம், ஒரு அரைசதம் உட்பட 983 ரன் எடுத்த இவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-2 என, சமன் செய்ய உதவினார். தவிர இவர், 11 ஒருநாள் போட்டியில், 2 சதம், 2 அரைசதம் உட்பட 490 ரன் எடுத்திருந்தார். இதில் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்ற 5 போட்டியில், ஒரு சதம் உட்பட 188 ரன் விளாசிய இவர் கோப்பை வெல்ல கைகொடுத்தார். சர்வதேச ‘டி-20’ போட்டியில் (291 ரன், 15 போட்டி) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

டிராவிட் தேர்வு: சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, முன்னாள் இந்திய கேப்டனும், பயிற்சியாளருமான டிராவிட் 53, தேர்வானார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி 2024ல் ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கைப்பற்றியது.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட கிரிக்கெட் சங்கத்துக்கான விருதுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.) தேர்வானது.

Source link