செங்கல்பட்டு: '' அதிமுகவின் கட்சியின் பெயரில் இருந்து அண்ணாதுரை மற்றும் திராவிடத்தை இபிஎஸ் நீக்க

செங்கல்பட்டு: ” அதிமுகவின் கட்சியின் பெயரில் இருந்து அண்ணாதுரை மற்றும் திராவிடத்தை இபிஎஸ் நீக்க வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

செங்கல்பட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக என்றால் வளர்ச்சி. திமுகவின் வளர்ச்சி திட்டங்களை தெரிந்து கொள்ள சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சுற்றி வந்தாலே தெரிந்துவிடும். மரணத்தை சந்திக்காத மனிதர்கள் யாரும் இல்லை. அனைவருக்கும் வரும். ஸ்டாலினுக்கும் வரும் மண்ணில் புதைப்பார்கள். ஆனால், ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை மண்ணில் புதைக்க முடியாது. இந்த திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின் தான் இந்த மண்ணை ஆள்வான்.ஆனால், அப்படி பேசவில்லை. கொரோனா காலத்தில் பேசவில்லை என பல்டியடித்தார்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் களத்தில் இருப்பவன் நான். கோவிட் காலத்தில் திமுக எப்படி கையாண்டது என அனைவருக்கும் தெரியும்.அக்காலத்தில் அரசுக்கு இணையாக ஒரு அரசை நடத்தியது திமுக. கொள்ளை அடிப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியது அதிமுக.

தமிழகத்தில், சென்னையில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவியது திமுகவினர் தான். வெள்ளம் பாதித்த போது நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் தான் அதிமுகவினர்.

இபிஎஸ் மட்டும் அல்ல அவருக்கு படியளக்கும் ஆர்எஸ்எஸ் சாபம் எங்களை ஒன்றும் செய்யாது.என் வாழ்நாளின் இறுதிமூச்சு வரை தமிழகத்துக்காக உழைப்பேன். இபிஎஸிடம் சொல்லிக் கொள்வதற்கு ஒன்றும் இல்லை. கூவத்தூரில் கூத்தடித்தவர்கள் அவர்கள். அந்த காட்சி நாடு முழுதும் வெளியாகி அவமானப்படுத்தினர். அப்படி முதல்வர் ஆன இபிஎஸ்ம், அமைச்சர்கள் என்ன ஆடினர் என்பதும் தெரியும். கூவத்தூரில் ஆடிய ஆட்டத்தை பொறுக்காத மக்கள் பாஜவுடன் போடும் ஆட்டத்திற்கு பொறுப்பார்களா?

.வெயிட் அன்ட் ஸீ இபிஎஸ். உங்கள் கொட்டம், வாய்க்கொழுப்பை அடக்குவதற்கான நாள் ஏப்.,23.நான் சொல்வதில் ரோஷம் வந்து ஒன்றும் செய்யப்போவதில்லை..எம்ஜிஆர் தலைமையில் இருந்து காலத்தின் கோலத்தால் உங்கள் கைகளில் சிக்கி உள்ள கட்சியில் இருந்து அண்ணா மற்றும் திராவிடத்தை எடுத்துவிட்டு யாருக்கு வேண்டுமானாலும் வணங்குங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Source link