செங்கல்பட்டு மாவட்டம், காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர்: ஆரோக்கியம் பெருகும்; கடன் தொல்லை தீரும்! | kattur uthira vaitheeswaran koil

இதில் நீராடி ஈசனை தரிசிப்பதால், எல்லா விதமான நோய்களும் பாவங்களும் நீங்கப் பெற்று வாழ்வில் வளம் பெறலாம். உடல் நலிவுற்றவா்களுக்காக அவா்களின் உறவினா்கள் மனமுருகி வேண்டிக்கொண்டு, இந்தத் தீா்த்த நீரை எடுத்துச்சென்று நோயாளிகளை அருந்தச் செய்தால், விரைவில் நோய் நீங்கி நலம் பெறுவார்கள் என்கிறார்கள் பலன் கண்ட பக்தர்கள்.

வைத்தீஸ்வரன்கோவிலைப்போலவே இங்கும் அங்காரகனுக்குத் தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. அங்காரகனை முறைப்படி வழிபட்டால் பூமி, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை நியாயமான வழியில் அபரிமிதமாகப் பெறலாம். மேலும் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என்கின்றன ஜோதிட நூல்கள். எனவே, அங்காரக தோஷம் உள்ளவா்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், எல்லா நலன்களையும் பெறலாம்.

காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில்

காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில்

அதேபோல், ஜாதகத்தில் அங்காரக (செவ்வாய்) தோஷம் காரணமாக திருமணத்தடை உள்ள அன்பா்கள், இங்கு வந்து தையல்நாயகி சமேத உத்தர வைத்தியலிங்கேஸ்வரப் பெருமானை வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி மனதுக்கினிய வாழ்க்கைத்துணை அமையப் பெறுவா் என்பது ஐதிகம்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை உத்தர வைத்தீஸ்வரன்கோவில் எனப்படும் காட்டூருக்குச் சென்று ஸ்ரீவைத்தியலிங்கேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஆரோக்கியம் மிகுந்து நன்மைகள் அதிகரிக்கும்.

Source link